பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமபடுவதால் வந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும், சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட உத்தரவிள்ளது.

பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.