shadow

தினக்கூலி ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோவில் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்களின் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு போதிய மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இன்று மாலைக்குள் 100% பேருந்துகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் இயக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தற்போது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply