shadow

modi and kamala

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி, மற்றும் வதேரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த தொகுதியில் இவர்கள் இருவரையும் எதிர்த்து சுயேட்சையாக திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

60 வயதான கமலா என்ற திருநங்கை அந்த பகுதியில் பல சமூக சேவைகள் புரிந்து பொதுமக்களிடம் செல்வாக்கு நிறைந்தவராக உள்ளார். நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரில் யார் இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், இந்த தொகுதிக்கு மக்களுக்கு நன்மை கிடைக்காது என்பதால்தான் தான் போட்டியிடுவதாக கூறிய கமலா, ஊழல் அரசியல் மற்றும் வாரிசு அரசியலை ஒழிக்கவே அரசியலில் குதித்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply