shadow

1391583729

தற்போது அனேகமானவர்கள் கையில் ‘ஆண்ட்ராய்டு’ செல்போன் இடம்பிடித்திருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் கவலை தரும் விஷயமாக இருப்பது மெமரி. பலரும், அதற்குள் போனில்  மெமரி முடிந்துவிட்டது என புலம்பும் நிலை காணப்படுகிறது.

இதுபோன்ற நிலையில், போனில் இருக்கும் சில முக்கிய பைல்களை கணினிக்கு மாற்ற முயற்சிப்போம். அவ்வாறு ஆண்ட்ராய்டு போனில் இருந்து கணினிக்கு பைல்களை மாற்ற பல வழிகள் உள்ளன. அவை பற்றி…

யூ.எஸ்.பி.

யூ.எஸ்.பி. முறையில் செல்போனில் உள்ள சில முக்கிய பைல்களை கணினிக்கு மாற்றுவது அனைவரும் தெரிந்ததுதான். இதுவே தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் முறையாகும். இந்த முறையில் சிறிய யூ.எஸ்.பி. கேபிளை கணினியுடன் இணைத்து பைல்களை சேமித்துக் கொள்ளலாம்.

பிரவுசர்

உங்க கணினியும், ஆண்ட்ராய்டு போனும் ஒரே வை-பை மூலம் இணைந்திருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தி தகவல்களை பறிமாற்றி கொள்ள முடியும்.

ஈ.எஸ். பைல் எக்ஸ்ப்ளோரர்

உங்கள் ஆண்ட்ராய்டு கருவியை விண்டோசில் இருக்கும் ஷேர்டு போல்டர் மூலமும் டேட்டாக்களை பறிமாற்றம் செய்ய முடியும்.

வை-பை

எஸ்.எம்.பி. சர்வர் மூலம், வை-பை வசதி கொண்ட எல்லா கணினிகளையும் ஆண்ட்ராய்டு போன் மூலம் இனைக்க முடியும். பொதுவாக எஸ்.எம்.பி. சர்வருடன் இணைக்க பல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.

சிங்ரனைஸ்

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் தகவல்களை எளிதாக கணினியுடன் இணைத்து பைல் பறிமாற்றம் செய்ய இந்த முறை உதவுகிறது.
கிளவுட் ஸ்டோரேஜ் டிராப் பாக்ஸ் அல்லது ஸ்கை டிரைவ் மூலமாகவும் தகவல்களைப் பறிமாற முடியும்.

Leave a Reply