தரையிலும் தண்டவாளத்தில் செல்லும் புதிய ரயில் டிரைலர்களை அரக்கோணத்தில் நேற்று சோதனை ஓட்டமாக ரெயில்வே ஊழியர்கள் நடத்திக்காட்டினர். கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் சரக்குரயில் பெட்டிகளில் டயர்கள் பொருத்தி சாலையில் செல்லும் படியான புதிய ரயில் டிரைலர்கள் வடமாநிலத்தில் தயாரிக்கப்பட்டு நேற்று அரக்கோணத்திற்கு வந்தது. இந்த புதிய ரயில் டிரலைர்களை தேவைப்படும்போது தண்டவாளத்தில் இருந்து இறக்கி சாலைகளிலும் ஓட்டலாம். பெரிய பெரிய கண்டெய்னர்களை ரயில்பெட்டிகளில் இருந்து இறக்கி மீண்டும் லாரிகளில் ஏற்றும் வேலைப்பாடுகளை இது குறைக்கின்றது.

இவ்வகையான டிரைலர்கள் ஏற்கனவே வடமாநிலங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்த நேற்று சுமார் 50 டிரைலர்கள் வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு வந்தது. இந்த டிரலைர்களை அரக்கோணம் மேல்பாக்கம் ரயில்வே யார்டுபகுதியில் இருந்து வாலாஜாவரை தண்டவாளத்திலும் அதன் பின்னர் மீண்டும் அரக்கோணம் வரை சாலையிலும் சோதனை ஓட்டத்தை ரயில்வே உயரதிகாரிகள் முன்பு நடத்தப்பட்டது.

Leave a Reply