அமீர் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் அமீர் மெக்கா புனித பயணம் சென்ற நிலையில் அவரது வீட்டில் நடந்த துயரம் காரணமாக பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திரும்பயுள்ளார்.

இயக்குனர் அமீரின் தாயார் உடல்நலக்குறைவு ஏற்பட மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாயாரின் மறைவு செய்தி தெரிந்ததும் மெக்கா சென்ற அமீர், விமானம் மூலம் மதுரை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் .