வைரலாகும் வீடியோ

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சமீபத்தில் தமிழ் புத்தாண்டு பிறந்த நாளை கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரங்கோலி பிகு என்ற அசாம் மாநில புத்தாண்டு கொண்டாடப்பட்டது

இந்த கொண்டாட்டத்தை அம்மாநில மக்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் அசாம் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து போலீசார் சாலையில் நின்று கைதட்டி ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டே பாட்டு பாடி நடனமாடி கொண்டாடி உள்ளனர் இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஊரடங்கு நேரத்தில் தங்கள் கடுமையான பணியிலும் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்கு அசாம் போக்குவரத்து போலீசார் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Leave a Reply