shadow

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மாற்றம்

centralசென்னையின் மையப்பகுதியாக உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அடிக்கடி குறிப்பாக அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து போகும் பயணிகள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ”மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெரிசலை குறைக்கும் வகையில் ஜூன் 15-ம் தேதி முதல் புதியதாக போக்குவரத்து மாற்றம் செய்து அமல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கார், வாடகை கார்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்கள் (மாநகர பஸ்கள் தவிர) சென்ட்ரல் முன்பு உள்ள நுழைவாயில் செல்ல இனி அனுமதிக்கப்படாது. அதற்கு மாறாக சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வர வாகனங்கள் அல்லிகுளம் சாலை வழியாக உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply