shadow

13 ஆண்டுகள் செயல்பட்டு வந்த டொரண்ட்ஸ் இணையதளம் மூடப்பட்டது.

torrentzஉலகில் மிக அதிக வாடிக்கையாளர்கள் உபயோகித்து வந்த டொரண்ட்ஸ் இணையதளம் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

கிக்ஆஸ் டொரண்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதை அடுத்து மற்றொரு பிரபல டொரண்ட்ஸ் சியர்ச் இன்ஜின் இணையதளமான டொரண்ட்ஸ்.இயூ (Torrentz.eu) என்ற இணையதளம் தனது சேவையை இன்றுடன் முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக மில்லியன்கணக்கானோர்களால் செயல்பட்ட டொரண்ட்ஸ்.இயூ இணையதளம் தனது சேவையை திடீரென நிறுத்திக்கொண்டதால் அந்த தளத்தின் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டொரண்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்த நிலையில் தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரண்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி மட்டுமே பதிலாக கிடைக்கிறது.

Leave a Reply