shadow

கேன்ஸ் விழாவில் திடீரென டாப்லெஸ் ஆக போராட்டம் நடத்திய பெண்!

தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் திடீரென ஒரு பெண் டாப்லெஸ்ஸாக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேன்ஸ் திரைப்பட திருவிழா மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த விழாவுக்கு வந்த பெண் ஒருவர் திடீரென தனது மேலாடையை கழற்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்

உக்ரைன் நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், அதனை கண்டித்து இந்த போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்