shadow

பிரிட்டனின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் இந்தியர்களா? ஆச்சரியமான தகவல்

britain“தி சன்டே டைம்ஸ்’ என்ற பத்திரிகை ஒவ்வொரு வருடமும் பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வரிசைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பிறந்து பிரிட்டனில் குடிபெயர்ந்த டேவிட், சைமன் ரியூபன் சகோதரர்கள் 13.1 பில்லியன் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடி சொத்துகளுடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர்கள் ஹிந்துஜா சகோதரர்கள் 13 பில்லியன் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.24 லட்சம் கோடி சொத்துகளுடன் 2ஆவது இடம் பெற்றுள்ளனர்.

ரியூபன் சகோதரர்களின் சொத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் அவர்களின் சொத்து மதிப்பு 3.4 பில்லியன் பவுண்ட் அதிகரித்திருக்கிறது.

மேலும் கடந்த 2008ஆம் ஆண்டில் 27.7 பில்லியன் பவுண்ட் சொத்துகளுடன் முன்னிலை இடத்தில் இருந்த பிரிட்டன் வாழ் இந்திய தொழிலதிபரும், பிரபல உருக்கு ஆலை அதிபருமான லட்சுமி என். மிட்டலின் சொத்து மதிப்பு தற்போது 7.12 பில்லியன் பவுண்டுகளாக இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்து அவர் இந்த ஆண்டு 11ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave a Reply