பல் வேர் சிகிச்சை என்றால் என்ன?

07bc4e5c-4fb1-4145-98d1-8729303a0b55_S_secvpf

பலருக்கு பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேர் சிகிச்சை ( ரூட் கனால்) முறையை செய்து குணப்படுத்தலாம். பல் ஈறுகளில் கரை படிதல், சுண்ணாம்பு போன்று கிருமிகள் தங்குவதால், ஈறுகள் வீக்கம் அடைந்து பல் வலி ஏற்படும். சில, நேரங்களில் ரத்தக்கசிவால் சீழ் வரலாம்.

இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால், பல்லை தாங்கி நிற்கும் எலும்பைத் தாக்கி, கரைத்து விடும். இதனால், பல் ஆட்டம் கொண்டு விழ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, ‘ஸ்கேலிங்’ என்ற நடைமுறையில் காரை, சுண்ணாம்பு போன்ற படியும் கிருமியும் அகற்றப்படுகிறது.ஈறு நோய் பாதிப்பு அதிகமாகி, பல் ஈறு கீழே இறங்கிவிட்டால், ‘பெரியடான்டல் பிளாப்’ எனும், அறுவை சிகிச்சை மூலம்,(எப்.எல்.ஏ.பி.,) சரி செய்ய முடியும். எலும்பு கரைந்து விட்டால், செயற்கை எலும்பு துகள்கள் கொண்டு, சரிப்படுத்த முடியும்.

Leave a Reply