shadow

கிலோ கணக்கில் தக்காளியை கீழே கொட்டிய விவசாயிகள்: அதிர்ச்சி புகைப்படம்

தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகி ஆனதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் 14 கிலோ கொண்ட தக்காளி ஒரு பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 130 ரூபாய் மட்டுமே விற்பனையாகி வருவதால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் தேறவில்லை.

இந்த நிலையில் போக்குவரத்து செலவு கூட கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து அதை கீழே கொட்டினர்.