அயோத்தி டென்ஷனை அடுத்து ஆரம்பமாகிறது சபரிமலை டென்ஷன்

அயோத்தி டென்ஷனை அடுத்து ஆரம்பமாகிறது சபரிமலை டென்ஷன்

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் குறித்த வழக்கின் டென்ஷன் கடந்த சனிக்கிழமை பரபரப்பாக இருந்தது. ஒருவழியாக இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இஸ்லாமியர்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டதால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் அயோத்தி டென்ஷன் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக சபரிமலை டென்ஷன் தொடங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்கவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது

இதனையடுத்து இந்த தீர்ப்பால் கேரளாவில் டென்ஷன் அதிகமாகியுள்ளது. இந்த தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply