ரஷ்யாவின் நாளை முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. ரஷ்யாவின் ஸோச்சி நகரில் நாளை தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஸோச்சி நகருக்கு வந்துள்ளன.தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, அந்த ஜோதி ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை சுற்றிவந்தது. சுமார் 65,000 கிமீ சுற்று வந்த இந்த ஒலிம்பிக் ஜோதி, இதுவரை ஒலிம்பிக் ஜோதி சுற்றிவந்த சாதனையை முறியடித்துள்ளது.
நாளை தொடக்கவிழா நிகழ்ச்சிகளை மிகவும் பிரமாண்டமாக நடத்த ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல தொலைக்காட்சிகள் இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.