நாளை கடைசி தினம்: ஐபிஎல் அணிகளுக்கு கெடு

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை வரை கெடு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள நிலையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 8 அணிகளும் யார் யாரை தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்த பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துக் கொள்வார்கள் என்பது குறித்து இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ருசிகர விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது