சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீட்டரில் திருத்தம் செய்து ஆட்டோவில் பொருத்த அக்டோபர் 15–ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அந்த கெடு நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இதற்கிடையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. .

மேலும் புதிய கட்டண அட்டையை ஆட்டோவில் பயணிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். புதிய கட்டணத்தை ஆட்டோவில் திருத்தம் செய்து பொருத்தும் இடைப்பட்ட காலத்தில் கட்டண அட்டையில் உள்ளபடி வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதுவரை 20 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள்  எவ்வித முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளனர்.

அரசின் காலக்கெடு நாளையுடன் முடிவதால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply