அதிரடி குழப்பம்

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் நாளை முதல் 29ம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது

எனவே காய்கறி மளிகை பொருட்கள் கடைகளில் கூட நாளை முதல் நான்கு நாட்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இதனை அடுத்து நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கும் பொது மக்கள் இன்று காலை முதல் கடைகள் முன் கூடினர்

இந்த நிலையில் சற்று முன் சென்னை மாநகராட்சியின் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி நாளை முதல் வழக்கமாக காய்கறி கடைகள் மட்டும் செயல்படும் என்றும் ஆனால் மளிகை கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது

காய்கறி கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றால் அதை சாக்காக வைத்து பலர் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்பதால் இது முழு ஊரடங்கா? அல்லது வழக்கமான ஊரடங்கா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply