நாளை 50,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி மையம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை அதாவது நாளை தடுப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

ஆறாவது கட்டமாக நடத்தப்படும் இந்த மெகா தடுப்பூசி ஐம்பதாயிரம் இடங்களில் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் அவரே இந்த மெகா தடுப்பூசி மையங்களின் சில பகுதியை பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.