shadow

நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40 சதவீதம் குறைகிறதா? அதிரடி தகவல்

நாடு முழுவதும் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நாடு முழுவதும் 40 சதவீதம் சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இதுகுறித்து கூறிய போது சுங்கச்சாவடிகளை அகற்றவும், வாகன பதிவின்போது கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் இப்போதைக்கு நாடு முழுவதும் சுங்க கட்டணத்தை 40 சதவீதம் குறைக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்

சுங்கச்சாவடியே இருக்கக் கூடாது என பல அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில் 40 சதவீத கட்டண குறைப்பு என்பது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது.