யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பிரபல இசை அமைப்பாளரும் இசைஞானி இளையராஜா அவர்களின் மகனுமான யுவன்சங்கர்ராஜா ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

அவருக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் தங்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

1996 ஆம் ஆண்டு அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைக்கத் தொடங்கிய யுவன்சங்கர்ராஜா அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பதும் அவர் இசையமைத்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இளைய இசைஞானி என்ற பட்டத்துடன் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்