shadow

world radio dayஇன்று பிப்ரவரி 13ஆம் தேதி உலக வானொலி தினம். இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவிப்பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் அவர்களுடன் நமது CTN இணையதளம் நடத்திய நேர்காணலின் தொகுப்பு.

CTN நடந்த்திய இந்த நேர்காணலில், வானொலியின் பரிணாம வளர்ச்சிகள், விஞ்ஞான வரலாற்றில் வானொலியின் உண்மையான கண்டுபிடிப்பாளர்கள் மறைக்கப்பட்டது குறித்தும், அயல்நாடுகளில் மற்ற ஊடகங்களைவிட வானொலிக்கு மக்கள் தரும் முக்கியத்துவம் குறித்தும், பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி மக்களுக்கான தகவல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தரும் பண்பலைகள் குறித்தும் விரிவான தனது கருத்துக்களை பேராசிரியர் பகிர்ந்து கொண்டார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1KTpkwh” standard=”//www.youtube.com/v/HA6PvxdRyv8?fs=1″ vars=”ytid=HA6PvxdRyv8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5131″ /]

மேலும் இப்பொழுதைய காலகட்டத்தில் மிக சொற்பமான அளவில் மட்டுமே பண்பலைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இம்மாதிரியான பண்பலைகள் தொழில்நுட்ப அளவில் இக்கால கட்டத்திற்கேற்ப தங்களை உருமாற்றி கொள்ளாமை, வானொலிக்கும் நேயர்களுக்கும் இடையே நிலவும் முகம் தெரியாத பரஸ்பர உறவிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் பரிணாம வளர்ச்சிகள், வர்ணனையாளர்களின் உச்சரிப்புகள், மொழி ஆளுமைகள், அலைவரிசைகளின் முறைவேறுபாடுகள், நிகழ்ச்சிகளின் மையக்கருத்துக்கள் யாருக்கான ஆகியவை விரிவாக இந்த பேட்டியில் அலசப்பட்டது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1KTq1Wl” standard=”//www.youtube.com/v/xq3POxDmvsc?fs=1″ vars=”ytid=xq3POxDmvsc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7497″ /]

வானொலி தோன்றியது முதல் இன்று  வ்ரை வானொலியின் பிறப்புகளையும், வளர்ப்புகளையும் தற்போதைய நகர்வுகளையும் பேராசிரியர் தெள்ளத்தெளிவாக தனது பேட்டியில் மதிவிளங்க எடுத்துரைத்துள்ளார்கள்.

இதுவரை பேராசிரியர் தனிப்பட்ட முறையில் வானொலியின் மீது கொண்டுள்ள பார்வைகள், வானொலி வாழ்க்கையில் அவருடைய அனுபவங்கள், பிடித்தமான, மறக்க இயலாத சம்பவங்கள் ஆகியவற்றை நமது CTN இணையதளத்தில் நேயர்களோடு நேசத்துடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நமது CTN இணையதளத்தில் வானொலி குறித்த பல்வேறு கருத்துக்களை தனது கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் தருவதற்கு அவர் இசைவு கொடுத்துள்ளார். எனவே மென்மேலும் வானொலி குறித்த ஆச்சரியமிக்க தகவல்களை தெரிந்து கொள்ள அவ்வப்போது CTN இணையதளத்துடன் தொடர்பில் இருக்க நேயர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply