கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருபவர் விஜயகாந்த் அவர்கள் ஜெயலலிதா கருணாநிதி என்ற இரண்டு ஆளுமையான அரசியல் தலைவர்கள் இருக்கும்போது அவர்களை எதிர்த்தும் அவர்களை அனுசரித்தும் அரசியல் செய்து வந்தார்

முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் வென்ற அவருடைய கட்சி அதன் பின்னர் அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் தான் அவரது கட்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்த் அவர்களுக்கு நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்