விஜயகாந்த் பிறந்தநாள்:

முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் விஜயகாந்த்துக்கு தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களுக்கு விஜயகாந்த் அதே ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply