shadow

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: என்னென்ன தயாராக இருக்க வேண்டும்?

இன்றைய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேர்வர்கள் என்னென்ன தயாராக இருக்க வேண்டும்?

* கண்டிப்பாக 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

* ஹால் டிக்கெட், அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவை), கருப்பு மை பேனா, தேவைப்பட்டால் முகக்கவசம் போன்ற தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்.

* ஒன்றுக்கு மேற்பட்ட பேனாக்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

* தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

* தேர்வு மையத்தில் 9 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது.

* நன்றாக விடைதெரிந்த, 100% உறுதியாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளியுங்கள்.

* சந்தேகம் உள்ள கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டாம். வினாத்தாளை முழுமையாக முடித்த பின், பதிலளித்துக் கொள்ளலாம்.

* நல்ல மனநிலையோடு, தேர்வுக்குச் சென்று நல்லபடியாக தேர்வு எழுதுங்கள்.