இந்திய கடலோர காவல் படையின் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் தொடங்குகிறது. இந்த விளையாட்டு போட்டியில் கபடி, கால்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் கடற்கரையில் நடைபெறும்.,

பீச் போட்டிகள் என்று அழைக்கப்படும் கடற்கரை போட்டிகளில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பீச் ஹாக்கி போட்டி மெரினாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் புதுச்சேரி, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த மூன்று அணிகளும் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

நாளை பீச் கால்பந்து போட்டிகள் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் 8 ஆண்கள் அணிகள் கலந்து கொள்கின்றன.

பீச் கபடி போட்டி நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

பீஸ் வாலிபால் போட்டி வரும் 9ஆம் முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும், இதில் 30 ஆண்கள் அணிகளும், 20 பெண்கள் அணிகளும் கலந்து கொள்கின்றன.

பீச் விளையாட்டு போட்டிகளை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply