சீமாந்திரா பகுதி எம்.பிக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் பதவி ராஜினாமா மிரட்டல் ஆகியவற்றையும் மீறி இன்று மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனிடையே தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டால், தற்கொலை செய்வோம் என சீமாந்திரா எம்.பிக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அனைத்து எம்.பிக்களும் கவனத்துடன் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும்  கூறப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் தயார் நிலையில் தீயணைப்பு வண்டி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மசோதாவை தாக்கல் செய்யும்போது அவர் தாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அவரை சுற்றி கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அமைச்சர் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Reply