கொரோனா இல்லா மாநிலம் ஆகிறது தமிழகம்!

corona virus

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,52,931 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது

மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 33 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,029 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.