இன்று ஒரே நாளில் 40 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்.

admkதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் இன்று  40 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்னர்.

இன்று மதியம் 1.40 மணி முதல் மாலை 3 மணிக்குள் இவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய அதிமுக தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. முதல்முறையாக அதிமுக எந்த கூட்டணிக்கட்சிகளின் துணையும் இன்றி 40 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்

ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனும் இன்று இதே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Leave a Reply