shadow

இன்றுடன் முடிகிறது உள்ளாட்சி தலைவர்களின் பதவி. தனி அதிகாரி நியமனமா?

chennai-corporation_0_0_0_0_0_2_0தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் தனி அதிகாரிகள் நியமனம் குறித்த தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் மேயர்கள்-மாமன்ற உறுப்பினர்கள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12, 524 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள்- உறுப்பினர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரை தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு இன்றைய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply