மும்பை பங்கு சந்தை இன்று வழக்கம் போல் இயங்குமா? பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பேருந்துகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே ஓடி வருகின்றது. மேலும் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இயங்குமா என்ற கேள்வி முதலீட்டாளர்களுக்கு எழுந்தது. இதுகுறித்து பிஎஸ்சி தலைவர் ஆஷிஸ் குமார் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மும்பை பங்கு சந்தை இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருவதால் முதலீட்டாளர்களின் பங்கு சந்தை ஆரம்பித்தவுடன் என்ன நிலைமையில் இருக்குமோ? என்ற அச்சத்திலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply