2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: என்ன காரணம்?

2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: என்ன காரணம்?

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே இன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேனி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.