கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது

நேற்று 7 பாசிட்டிவ் மட்டுமே

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இந்தியாவில் முதல்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

நேற்று கேரளாவில் 7 பேர்களுக்கு மட்டுமே புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தை ஒப்பிடும்போது பத்து மடங்கு குறைவு ஆகும்.

மேலும் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் மொத்தம் 124 நாள் குணமாகியுள்ளதாகவும் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் 1,29,751 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும், 730 கொரோனா வார்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள கேரள முதல்வர் இதுவரை கேரளாவில் 13,339 பேர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply