shadow

டெல்லி மேல்சபைக்கு இன்று தேர்தல். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெற்றி பெறுவாரா?
nirmala
டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் 57 பேரின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து, அந்த இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 6 எம்பிக்கள் உள்பட 30 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதி 27 இடங்களுக்கு இன்று 7 மாநிலங்களில் நடக்கிறது.

உத்தரபிரதேசத்தில் 11 இடங்களுக்கும், கர்நாடக மாநிலத்தில் 4 எம்.பி. பதவிகளுக்கும், அரியானா மாநிலத்தில் 2 எம்.பி. பதவிகளுக்கும், மத்தியபிரதேசத்தில் 3 இடங்களுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 4 இடங்களுக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்துக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் வெற்றி பெற 5 ஓட்டுகள் தேவை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 2 வேட்பாளர்களுக்கு தேவையான ஓட்டுகள் போக, உபரியாக 12 ஓட்டுகள் உள்ளன. அந்த ஓட்டுகள் கபில் சிபலுக்கு விழுந்தால் அவர் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் அது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் 4 எம்.பி. பதவிகளுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஒரு ஓட்டு பற்றாக்குறையாக உள்ளது. அந்த ஒரு ஓட்டு மாற்று கட்சிகளிடம் இருந்து கிடைத்தால்தான் அவருடைய மந்திரி பதவி தப்பிக்கும் நிலை உள்ளது.

அரியானா மாநிலத்தில் 2 எம்.பி. பதவிகளுக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி வீரேந்திர சிங்கின் வெற்றி உறுதியான நிலையில், அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா, காங்கிரஸ் ஆதரவு பெற்ற மூத்த வக்கீல் ஆர்.கே.ஆனந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மத்தியபிரதேசத்தில் 3 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில், பா.ஜனதா 2 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. 3-வது இடத்துக்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில், 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்பட 3 பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. 4-வது இடத்துக்கு போட்டி நிலவுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இரண்டாம் இடத்துக்கு பா.ஜனதா வேட்பாளருக்கும், சிபுசோரன் மகன் பசந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Leave a Reply