12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

chennai rain 4

தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை பொருத்தவரை ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.