shadow

4aaமேஷம்
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கடகம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
காலை 10. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கன்னி
காலை 10. 30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரங்களுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
காலை 10. 30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனப் பழுது நீங்கும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
காலை 10. 30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

Leave a Reply