100வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 100 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இருப்பினும் ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது.