ரூ.101ஐ தாண்டியது டீசல் விலை: பெட்ரோல் விலையும் உயர்வு

கடந்த சில மாதங்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது

சராசரியாக 3 நாட்களுக்கு 1 ரூபாய் என்ற விலையில் உயர்ந்து கொண்டு வருவதால் பெட்ரோல் விலை 105 எனவும், டீசல் விலை 101 ரூபாய் எனவும் உயர்ந்துவிட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளதால் பெட்ரோல் ஒரு லிட்டர் 105 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து உள்ளதால் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் ரூ.101.25 என்ற விலைக்கும் விற்பனையாகிறது.