குறைந்தது கொரோனா!

தமிழகத்தில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒருசில நாட்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்ற நல்ல செய்தியை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply