புதுவையில் திடீர் திருப்பம், இன்று மதுக்கடைகள் திறப்பு இல்லை:

 கவர்னர் காரணமா?

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் இயக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான கடைகளில் விற்பனை நடத்ததலாம்’ என்று தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசிதழில் வெளியிட வேண்டிய காரணத்தினால் இன்று கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

எனவே புதுவையில் மே 20-ம் தேதி கடைகளைத் திறக்க வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply