பள்ளிகள், கல்லூரிகள் இன்று விடுமுறை

பள்ளிகள், கல்லூரிகள் இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு பொது மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.