அணை திறந்தாலும் சாகுபடி வேண்டாம்: வேளாண் அதிகாரியின் அறிவுரையல் விவசாயிகள் குழப்பம்

அணை திறந்தாலும் சாகுபடி வேண்டாம்: வேளாண் அதிகாரியின் அறிவுரையல் விவசாயிகள் குழப்பம்

மேட்டூர் அணை நீண்ட நாட்களுக்கு பின்னர் 100 அடி கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசனத்திற்கு இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அணை திறக்கப்பட்டாலும் உடனடியாக விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டாம் என வேளாண் அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது தற்போது சாகுபடி செய்தால் அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவ மழையின்போது அறுவைடை செய்ய வேண்டிய நிலை வரும் இதனால் வளர்ந்த பயிர்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்போது திறந்துவிடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்து, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், நாற்று நட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில், நடவு செய்தால் மழையில் இருந்து பயிர்கள் தப்பும் என்று வேளாண் அதிகாரி அறிவுரை கூறியுள்ளார். இதனால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்

Leave a Reply