தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி மையங்கள்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

சென்னையில் 1600 முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்றைய தடுப்பூசி முகாம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது