shadow

voters list

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் விடுபட்ட தங்கள் பெயர்களை  சேர்க்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் மற்றும் திருத்தங்கள் செய்யவும்  கடந்த 9 ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன.

இந்த  சிறப்பு முகாம்களையும் தவற விட்டவர்கள் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான elections.tn.gov.in என்ற இணையதளம்மூலமாகவும் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளரின் புதிய பட்டியல் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply