shadow

8aaa
மும்பையில் இன்று கோச்சடையான் திரைப்படம் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்காக சிறப்புக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த காட்சியை அவருடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஷாருக்கான், மற்றும் சில முக்கிய வி.ஐ.பிக்கள் இந்த படத்தை பார்க்க உள்ளனர்.

கோச்சடையான் திரைப்படம் வரும் மே மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள 5000 திரையரங்களுகளில் ரிலீஸாக உள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளருக்காக இன்று மும்பையில் சிறப்புக்காட்சி ஒன்றை திரையிட படத்தின் இயக்குனரும், ரஜினிகாந்த்தின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று மும்பை சென்றுள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்த மோடி, ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply