இன்று முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்: முதல் போட்டியில் மோதும் சென்னை-மும்பை

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கியது என்பதும் அதன் பின்னர் இருபத்தி ஒன்பது போட்டிகள் நடைபெற்ற நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளன இன்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியின் துபாயில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது