ஹிஜாப் அணிய அனுமதி உண்டா? இன்று நீதிமன்ற விசாரணை!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகவும் இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்க கோரிய வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.