shadow

இன்று 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை எச்சரித்துள்ளது.

இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.