கோகுலாஷ்டமி பூஜை: பக்தர்கள் கொண்டாட்டம்

krishnar jayanthi1

ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை விசேஷமாகக் கொண்டாடி வரும் நிலையில் இன்று கோகுலாஷ்டமி என்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட்டு வருகிறது
இன்றைய நாளில் விரதமிருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் அலங்காரம் நைவேத்தியம் படைத்து அவரின் கதைகள் பாடல்கள் பஜனைகள் பாடி பக்தர்கள் அருள் பெற்று வருகின்றனர் இவ்வாறு செய்வதால் கிருஷ்ணபரமாத்மா நம்முடைய வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதிகம்

இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக பக்தியுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் சிலை வைத்து பூஜை செய்யும் இடத்தை மாக்கோலமிட்டு அலங்கரித்து கிருஷ்ணரின் பாதம் வீட்டில் வருவது போன்று வைத்து வருகின்றனர்

மல்லிகை பூ அலங்காரம் பண்ண மலர்களையும் வைத்து கிருஷ்ணரின் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. வெண்ணை மற்றும் அவள் பூஜையில் வைக்கப்பட்டுள்ளன இன்று கிருஷ்ணருடைய பகவத் கீதை உள்பட நூல்களையும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது