shadow

சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

கடந்த சில நாட்களாக நிகழ்ந்த அரசியல் குழப்பங்களுக்கு இன்று தீர்வு ஏற்படுமா? என்பதை முடிவு செய்யும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் வன்முறை ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பெருமளவில் குவிய வாய்ப்பு இருப்பதால் பத்திரிகையாளர்களுக்கான பகுதி விரிவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply